Left Continue shopping
Your Order

You have no items in your cart

மாம்பழமா மாம்பழம்! - கோடையில் சுவைக்க - AlphonsoMango.in

மாம்பழமா மாம்பழம்! - கோடையில் சுவைக்க

மாம்பழமா மாம்பழம்! - கோடையில் சுவைக்க வேண்டிய மாங்கனிகள் 

கோடைகால ராஜா

என்னதான் கோடைகாலத்துல, சூரியன் கொஞ்சம் கூட பாரபட்சம் பாக்காமா சுழீர்னு சுட்டெரிச்சாலும், விதவிதமா மாம்பழம் விளையுற சீசன் ஆரம்பம்கிறனாலேயே நம்ம என்னமோ கோடைகாலத்த வெறுக்கறதில்ல. இனிப்புல்ல தன்னிகற்ற, சுவைல அடிச்சுகமுடியாத, சத்துகள்ல எல்லையே இல்லாத, பழங்களின் ராஜா தான் மாம்பழம். சும்மாவா இத முக்கனிகள்ல, முக்கியமான கனினு சொல்றாங்க? இத்தகைய மாம்பழங்கள, விரும்பாதவங்களே இருக்க முடியாதுனுதான் சொல்லனும். சிலர் இத பச்சையா ஊறுகா போட்டு சுவைப்பாங்க, சிலருக்கு பழமே அமிர்தம், வேறு சிலரோ மாம்பழச்சாறு பிரியர்கள். சொல்லபோனா, உலக அளவில் மாம்பழத்துக்கு மவுசு அதிகம். காரணம், இதன் சுவைக்கு உலகின் மூலை, முடுக்கிலெல்லாம் ஏராளமான ரசிகர்கள்.

மாம்பழச் சாகுபடி

ஒரு மாம்பழம் பழுத்துருச்சா இல்லையா, அத சாப்டலாமா, கூடாதானு எப்டி சொல்றது? அதுக்கு பொதல்ல மாம்பழங்களை பழுக்கவைக்கும் முறைகளைப் பற்றி நம்ம கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் செயற்கையாக பழங்களை பழுக்கவைக்கும் வழிமுறைகள பாத்துக்குடீங்கனா, மாம்பழங்களை கல் வைத்து பழுக்கவைக்கவே ஊக்குவிக்குறாங்க. சாதாரன கல் இல்லைங்க,  அதாவது, வெள்ளை நிறத்தில் இருக்கும் கால்சியம் கார்பைடு கற்களைதான் இதற்குப் பயன்படுத்துறாங்க. இத பயன்படுத்துறதுனால, பழத்துல இருக்க கறுப்பு புள்ளிகள் நீங்கி, நல்லா மிடுக்கா வலுவலுப்பா தோற்றம் கொண்டிருக்கும்.

இயற்கை முறைய பாத்துக்குட்டீங்கனா, காகிதம், ஊதுவத்தி ஆகியவற்றை பயன்படுத்துறாங்க. புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவச்சுருவாங்க. இதோட நோக்கம் என்னன்னா, வெப்ப தன்மைய அடக்கி வைக்க வைக்க, காய் கொஞ்சம் கொஞ்சமா, பழமா பழுக்க ஆரம்பிக்கும். இரண்டு நாள்களில் மாங்காய்கள் பழுத்துவிடும்.

நம்மல்ல பலர், மாம்பழம் வாங்க சந்தைக்கு போவோம், ஊர் பக்கத்துல சிலர் பன்னைல வாங்குவோம், ஏன் வெளியூர்ல இருக்கவங்க கூட நம்ம ஊர் மாம்பழத்த ஆன்லைன்ல வாங்கலாம். இப்படி நம்ம வாங்கும்போது, அல்போன்சா, கேசர், பங்கனப்பள்ளினு வகை வகையா மாம்பங்கள் இருக்கும். பல்வேறு வகையான மாம்பழங்கள் நமக்கு திகைப்பை ஏற்படுப்படுத்தியும் இருக்கலாம் எந்த மாம்பழம் எப்படி இருக்கும்னுகண்டுபிடிக்க முடியாமல் திணறவும் வைத்திருக்கலாம். எனவே, சில பிரமலமா மாம்பழ வகைகள எப்படி கண்டுபுடிக்கலாமுனும், ஒவ்வொரு வகைக்கும் உரித்த தனித்தன்மை என்னனும் வாங்க பாக்கலாம்.

மாம்பழ வகைகள்

கேசர்

இந்த வகை மாம்பழம் சௌராஷ்டிரா பகுதியிலும் குஜராத்தின் கட்ச் பகுதிகளிலும் விளைகிறது. இந்த மாம்பழத்துக்கு தனித்துவமே அதோட அருமையான நறுமணம் தான், ஒரு மாம்பழம் இருந்தாலே வீடே கமகமக்கும்னா பாத்துக்கோங்களேன். இதோட தோல் குங்குமப்பூ நிறத்துல இருக்கதாலேயே இதுக்கு, “கேசர்” அப்டின்ற பேரு வைக்கப்பட்டது. கேசர் மாம்பழம் “மாம்பழங்களின் ராணி” என்றும் அழைக்கப்படுகிறது. சக்க சக்கையா இருக்குற நாரவிட, இதுல சுவைக்கும் பழமே அதிகமா இருப்பதால இது மக்களிடத்தே ரொம்பவும் பிரபலமான ஒரு பழவகை.

அல்போன்சோ/ஹபுஸ்

இந்த வகை மாம்பழங்கள் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் இப்போ வளர்க்கப்படுது. இந்தியாவின் விலை உயர்ந்த மாம்பழ வகைகளில் இதுவும் ஒன்னுனா பாத்துக்கோங்களேன். இது சிவப்பு நிறத்துடன் மஞ்சள் நிற தோலுடன் இருக்க இந்த மாவகை தான் அதிகமா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுது.

இந்த அல்போன்சோவிலேயே இரண்டு வகை இருக்க, ஒன்னு ரத்தினகிரி வகை, இன்னொன்னு தேவ்கத் வகை. மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரிலருந்து வர இந்த ரத்தினகிரி வகை, கொஞ்சம் தங்க நிறத்துல, சீக்கிரம் பழுக்கக்கூடிய ஒரு வகை. அதுனால, இதோட உண்மையான சுவைய அனுபவிக்க நம்ம சுற்றுவட்டாரத்திற்குத் தான் போகனும்.

தேவ்கத் மாம்பழம், கொஞ்சம் சின்னதா சிவப்பு நிறத்துல ஜொலிஜொலிக்கும். என்னதான் சுவைல ரத்தினகிரி மாம்பழத்த அடிச்சுக்க முடியாட்டியும், இந்த தேவ்கத் மாம்பழத்திற்குனே ஒரு தனி சுவை இருக்குது. ஊறுகாய்ல அதிகமா பயன்படுத்தப்படுறதும் இந்த தேவ்கத் வகை தான்.

நீலம்

இந்த வகை மாம்பழம் ஹைதராபாத்துல தான் விளையுது, ஆனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிது. இந்த மாம்பழங்கள் மற்ற மாம்பழ வகைகளை விட ரொம்பவே சின்னதா இருக்கும். இவற்றின் தோல் ஆரஞ்சு நிறத்துல இனிமையா மணமணக்கும் பொதுவாக ஜூன் மாதத்தில் இந்த பழங்கள் சந்தையில் ஏராளமாக கிடைக்கும். இதன் சுவை உங்கனை சொர்கத்திற்கே அழைத்துச்செல்லும்னா சொல்லவா வேணும்.

மாம்பழமும் மருந்தாகுமே

பொதுவாகவே மாம்பழங்கள், வாதம் மற்றும் பித்தத்தைப் போக்க உதவும்ங்க. இதுல அதிக அளவு கெரட்டின் சத்து, பார்வைத்திறனையும் முடி வளர்ச்சியையும் மேம்படுத்தும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால,  ரத்தச்சோகையைச் சரிசெய்யும்.

இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை, குடல், மார்பகம் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடலுக்கு அளிப்பவை. ஆக, மாம்பழமே மருந்தாகும்

கேசர் மாம்பழத்த பாத்துக்குட்டீங்கனா, கண் பார்வைக்கும், சருமனுக்கும் ரொம்பவே நல்லது. ஏன் இது புற்று நோய், ஆண்மைக்குறைவு, சக்கரை வியாதினு ஏராளமான நோய குணப்படுத்தவும் வல்லது. இயற்கையே மருந்துனு சும்மாவா சொன்னாங்க, இந்த மாம்பழங்கள் ஊடச்சத்து அளித்து, ஞாபகச்தியை வளக்கவும் செய்யும்னா பாத்துக்கோங்களேன்.

Leave a comment

Please note: comments must be approved before they are published.